ஆழ்துளை கிணறில் அசைவின்றி குழந்தை..

Arun Prasath
சனி, 26 அக்டோபர் 2019 (10:59 IST)
நேற்று மாலை 5.40 மணி அளவில், திருச்சி நடுகாட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணறு ஒன்றில் இரண்டு வயது சிறுவனான சுர்ஜித் தவறி விழுந்தத்தை தொடர்ந்து 17 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் மேற்கொண்டு வருகிறது.

கிட்டதட்ட 129 அடி ஆளமுள்ள கிணற்றில் குழந்தை 70 அடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டையை சேர்ந்த வீரமணி குழு மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சற்றுமுன் பேரிடர் மீட்பு குழு விரைந்து வரவுள்ளதாக தகவல் வெளியானது. அனைத்து மக்களும் பேரிடர் மீட்பு குழுவினரை நம்பிக்கையுடன் எதிர்ப்பார்த்துள்ளனர். முன்னதாக 5 குழுக்களால் முயன்றும் குழந்தையை மீட்க முடியவில்லை. தற்போது 6 ஆவது குழு முயன்று வருகிறது.

முன்னதாக சுஜித்தின் மேல் மண் மூடியிருந்த நிலையில் தற்போது மண்ணை அகற்றி ஒரு கருவியால் குழந்தையை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் குழந்தை அசைவின்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது. ஆர்.எஸ். பாரதி மனுவை தள்ளுபடி செய்வேன்: நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் பீகாரிகள் அவமதிக்கப்படுகிறார்களா? பிரதமரின் சர்ச்சை பேச்சு..!

கணவரை கொன்று புதைத்த மனைவி மற்றும் மகள்கள்: வெளியூர் சென்றதாக 50 நாட்களாக நாடகம்..!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை.. அதிகாரப்பூர்வமாக வெளியீடு..!

திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் வீட்டில் மர்மமாக மரணம் அடைந்த மணமகள்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments