Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இடமாற்றம்: கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி முதல்வர் அறிவிப்பு!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (18:53 IST)
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தவேண்டிய ரெம்டெசிவிர் என்ற மருந்து தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் விற்பனையாகி வருகிறது இந்த மருந்தை வாங்குவதற்காக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து குவிந்து வருகின்றனர் என்பதும் அதிகாலையில் இருந்தே வரிசைகளில் நின்று இந்த மருந்தை ஏராளமான மக்கள் வாங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து அரசின் உரிய விலையில் விற்பதால் பல மாவட்டங்களிலிருந்து ஏராளமான மக்கள் திரள்கிறார்கள். இந்த நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க கூட்டம் அதிகமாக இருப்பதால் தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நாளை முதல் மருந்து விற்பனை செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 2 மையங்களில் நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்றும் எனவே நெரிசல் இன்றி பொதுமக்கள் இந்த மருந்தை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments