Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

Stroam

Senthil Velan

, சனி, 25 மே 2024 (21:02 IST)
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறி உள்ளது.

தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து, தற்போது கோடை மழை பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.
 
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் வடதமிழக-தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று தற்போது புயலாக மாறி உள்ளது.

அந்த புயலுக்கு ரீமால் என பெயரிடப்பட்டுள்ளது. ரீமால் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் தீவிர புயலாக வலுவடையும் என  கூறப்பட்டுள்ளது.


இந்த தீவிர புயல் வங்காளதேசம் மற்றும் சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!