Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி! – வாழும் கலை அமைப்பினர் முன்னெடுப்பு!

Advertiesment
Relief goods
, செவ்வாய், 26 டிசம்பர் 2023 (12:13 IST)
தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வாழும் கலை அமைப்பினர் நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர்.


 
வாழும் கலை அமைப்பின் மூலம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி,  மாவட்டங்களில் உள்ள வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளான  புன்னைக்காயல், ஆதிச்சநல்லூர், ஆழ்வார்கற்குளம், செக்கடி, தோவாளை, களக்காடு, அம்பாசமுத்திரம், குறுந்துடையார்புரம், வண்ணாரப்பேட்டை, மணிமூர்த்தீஸ்வரம், இலந்தகுளம் ரோடு,  மற்றும் வசவப்பபுரம் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மக்களுக்கு களத்தில் சென்று தொண்டர்கள் மூலமாக கடந்த நான்கு நாட்களாக   நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களான அரிசி, பருப்பு, பால் பவுடர், கோதுமை மாவு, எண்ணெய், ரவை, டீ பவுடர், போர்வை மற்றும் பல பொருட்கள்  வழங்கப்பட்டு வருகின்றது. இதுவரை நூற்றுக்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளனர்.

இந்த மகத்தான சேவையில் உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட அலைப்பேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்

திரு.மணிகண்டன், 9894320282

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதி ஸ்டாலின் திமுகவை பீஸ் பீசாக்கி மூட்டை கட்டி கடலில் வீச பார்க்கிறார்! -பாஜக மாநில தலைவர் அண்ணாமலை!