தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதை பார்த்தோம்
ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிப்பு என அறிவித்த அவர் பல்வேறு தளர்வுகளையும் அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது. அதில் ஒன்றாக திருமணங்களுக்கான பயண அனுமதி குறித்த அறிவிப்பை தற்போது பார்ப்போம்
வகை ஒன்றில் உள்ள மாவட்டங்களுக்கு இடையேயும் வகை 2, 3 ஆகிய மாவட்டங்களிலிருந்து வகையில் 1ல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணம் சார்ந்த போக்குவரத்து பெற்று அனுமதிக்கப்படும். இதற்கான திருமணம் நடைபெற உள்ள மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து இணையத்தின் வழியாக மணமகன் அல்லது மணமகள், அல்லது அவர்களது பெற்றோர் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்
வகை ஒன்றில் உள்ள மாவட்டங்களில் இருந்து வகை 2, 3 இல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிகள் கண்டிப்பாக இபாஸ் பெற வேண்டும். மேலும் திருமண நிகழ்வுகளில் 50 பேர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களில் இடையே திருமணம் சார்ந்த போக்குவரத்திற்கு இ பாஸ் இல்லாமல் பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது