Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

13 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த உறவினர்களுக்கு சிறைத்தண்டனை!

Advertiesment
abuse
, செவ்வாய், 20 டிசம்பர் 2022 (15:00 IST)
சென்னை மயிலாப்பூருக்கு அருகில்  அசித்து வசித்து இளம் சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் காவல்  நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் தன் தாத்தாவின் பராமரிப்பில் வசித்து வந்த 13 வயது சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளானார்.

இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் தாத்தா, 3 சித்தப்பாக்களின் மகன் கள் 2 பேர் உட்பட 6 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில்  நடந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், சிறுமியின் தாத்தா, 3 சித்தப்பா ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் 1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் அளித்து நீதிபதி தீர்பளித்துள்ளார்.

மேலும் சிறுமிக்கு அரசு சார்பாக ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குமரிக்கடலில் மீன்பிடிக்க சென்ற 5 மீனவர்கள் மாயம்: தேடும் பணியில் கடலோர காவல்படை!