Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தழிழ்நாடு காவல் துறையில் ஆன்லைன் எப்.ஐ.ஆர் சேவை: இனி வீட்டில் இருந்தே புகார் செய்யலாம்

தழிழ்நாடு காவல் துறையில் ஆன்லைன் எப்.ஐ.ஆர் சேவை: இனி வீட்டில் இருந்தே புகார் செய்யலாம்
, செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (15:58 IST)
தழிழ்நாடு காவல் துறை, வலைதல முதல் தகவல் அறிக்கையை (Online FIR)சமீபத்தில் துவங்கியது. இந்த புது சேவையின் மூலம் புகார் தொடுக்க விரும்பும் நபர்கள் காவல் நிலையம் சென்றுதான் புகார் கொடுக்க வேண்டும் என்ற நிலையை தவிர்த்து வீட்டில் இருந்தப்படியே இணையத்தின் உதவியுடன் புகார் கொடுக்கலாம். இந்த வசதி தமிழ்நாடு மட்டுமின்றி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹரியானா, உத்திரபிரதேசம் போன்ற இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது. இந்த ஆன்லைன் எப்.ஐ.ஆர் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் தவறாக பயன்படுத்தினால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பற்றி விரிவாக இங்கு பார்க்கலாம்.


 

 
இந்த சேவையின் மூலம் தமிழ்நாட்டில் உறைவிடம் கொண்டவர்கள் புகார் கொடுக்கலாம். தவறான புகார்களை பதிவேற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். தவறான தகவல்களை பதிவேற்றம் செய்யும் புகார்தாரர் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்கு தொடரப்படும்.
 
 
உங்கள் புகார்களை பதிவு செய்ய இந்த இணையத்தளத்திற்கு செல்லவும்
 
http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?1
 
மேலேக் கொடுக்கப்பட்டுள்ள இணையத்தள முகவரிக்கு சென்றப் பின்
 
District: உங்கள் மாவட்டம் தேர்வு செய்யவும்(எ.கா: சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர்)
 
Name: புகார் கொடுக்க விரும்புவரின் பெயர் பதிவு செய்யவும்
 
Date of Birth: புகார் கொடுக்க விரும்புவரின் பிறந்த தேதி பதிவு செய்யவும்
 
Address: புகார் கொடுக்க விரும்புவரின் முகவரி பதிவு செய்யவும்
 
Mobile Number: புகார் கொடுக்க விரும்புவரின் அலைப்பேசி எண் பதிவு செய்யவும்
 
Email ID: புகார் கொடுக்க விரும்புவரின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்


webdunia

 

 
Subject: உங்கள் புகார் எந்த வகை என்பதை தேர்வு செய்ய வேண்டும்
 
Date of Occurrence: நிகழ்வு/சம்பவம் நடைப்பெற்ற தேதி பதிவு செய்யவும்
 
Place of occurrence: நிகழ்வு/சம்பவம் நடைப்பெற்ற இடத்தை பதிவு செய்யவும்
 
Discription: உங்கள் புகாரை முழுமையாக இங்கே பதிவுசெய்யலாம்
 
Want to attach Documents [Max. 4MB(PDF, PNG, JPEG) Files alowed]:உங்கள் புகார் தொடர்பாக ஏதேனும் கோப்புகளை இணைக்க வேண்டுமென்றால் அந்த கோப்புகள் அதிகப்பட்சமாக 4MB க்குள்ளாகவும் PDF, PNG, JPEG போன்ற வடிவங்களில் இருத்தால் மட்டும் பதிவேற்றம் செய்ய இயலும்.
 
Security Code: இவை அனைத்தும் நிறைவு செய்தப் பிறகு கொடுக்கப்பட்டுள்ள பாதுக்காப்பு குறியீட்டு எண்னைப் பதிவு செய்ய வேண்டும்
 
Register: அனைத்தும் செய்து முடித்தப் பிறகு உங்கள் புகாரை பதிவு செய்து நீங்கள் பதிவு செய்ததற்கான ரசீது மற்றும் எப்.ஐ.ஆர் எண் உங்களுக்கு வழங்கப்படும்.


webdunia

 

 
Tamilnadu Police Citizen Portal என்ற இணையத்தளத்தில் உங்கள் எப்.ஐ.ஆர் எண்னைப் பயன்படுத்தி உங்கள் புகார் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
 
இது போன்ற தொழிநுட்ப்ப முன்னேற்றங்கள் நமது நேரத்தையும், அலைச்சல், மன அழுத்தம் போன்றவற்றை அதிகளவில் குறைப்பதோடு குற்றங்களுக்கான தீர்வும் விரைவில் கிடைக்கும். எனவே இது போன்ற தொழில்நுட்பங்களை நல்ல விதங்களில் பயன்படுத்தி பயன் பெறுவோம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் இறந்து 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன்: பேசுவது ஜெயலலிதாவின் ஆவி!