Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சசிகலா புஷ்பாவின் சிகப்பு ஜாதகம்: கார்டனில் நடந்த அதிரடி விசாரணை!

Advertiesment
சசிகலா புஷ்பாவின் சிகப்பு ஜாதகம்: கார்டனில் நடந்த அதிரடி விசாரணை!
, சனி, 6 ஆகஸ்ட் 2016 (09:54 IST)
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் எப்படி தினம் தினம் ஒவ்வொரு தகவல்களா வருகிறதோ, அதேப்போல அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா பற்றி தினம் தினம் பல அதிர்ச்சியூட்டம் தகவல்கள் வருகின்றன.


 
 
அதிமுக தலைமை தன்னை பதவி விலக வற்புறுத்தியதாகவும், அடித்ததாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி அரசியல் அனுதாபத்தையும், ஊடக கவனத்தையும் பெற்றார் சசிகலா புஷ்பா.
 
இந்நிலையில் திருச்சி சிவாவை அடித்த சசிகலா புஷ்பா போயஸ் கார்டனுக்கு வரவழைக்கப்பட்ட போது என்ன நடந்தது என்பது பற்றிய தகவல் கசிந்துள்ளது.
 
முதலில் தம்பிதுரை அழைக்கப்பட்டார், அம்மா, திருச்சி சிவா உங்களை பற்றி தவறாக பேசியதால் தான் சசிகலா புஷ்பா அவரை அடித்தார் என கூறினார். ஆனால் சசிகலா புஷ்பா ஏன் திருச்சி சிவாவை அடித்தார் என்பதை மேலிடம் முன்னதாகவே அறிந்திருந்தது.
 
திருச்சி சிவாவை அடிக்கும் போது சசிகலா புஷ்பா குடித்திருந்தாரா என மேலிடம் கேட்க தம்பிதுரை நடுங்கிவிட்டதாக கூறப்படுகிறது. நீங்க சொல்லலேன்னா டெல்லியில என்ன நடக்குதுன்னு எங்களுக்கு தெரியாதுன்னு நினைக்குறீங்களா?.
 
ஆனந்த் சர்மாவோட அடிக்கிற கூத்து, நரேந்திர மோடியையே என் கைக்குள்ள கொண்டுவந்திடுவேன் என சசிகலா புஷ்பா பேசுனது என எல்லாமே ஒன்னுவிடாம தெரியும். அதனால் தான் அவரை ஓரங்கட்டி வச்சிருந்தேன் என தம்பிதுரையிடம் மேலிடம் பேசியதாக கூறப்படுகிறது.
 
பின்னர் சசிகலா புஷ்பா அழைக்கப்பட்டார், அம்மா, உங்கள பத்தி அவரு தவறா பேசினாரு, அதனால தான் என சசிகலா போனதும் கண்ணீர் வடித்துள்ளார். சற்றும் மயங்காத மேலிடம் ஏர்போர்ட்டில் என்ன நடந்ததுனு டிவி ஃபூட்டேஜ காட்டனுமா? அந்த வீடியோவுல நீங்க இரண்டு பேரும் என்ன பேசுனிங்கனு பதிவாகி இருக்கும் என கூற சசிகலா புஷ்பா நடுங்கி விட்டார்.
 
நீயும் சிவாவும் ஒரே கார்ல ஏர்போர்ட்டுக்கு வந்ததாக சொல்றாங்க? ஓவரா குடிச்சு ஆட்டம் போட்டு சிவாவோட வீட்டுலயும் சண்ட போட்டுட்டு, ஏர்போர்ட்டுலயும் வந்து தகராறு பன்னி சட்டைய பிடிச்சு அடிச்சிருக்க. ஆனால் மீடியாக்கள் கிட்ட அம்மாவ பத்தி தப்பா பேசுனதால அடிச்சேன்னு சொல்லியிருக்க. நீ யாரு, உனனோடஜாதகம் என்ன, நீ என்ன பன்ற எல்லாம் எங்களுக்கு தெரியும் என மேலிடம் கூறியதாக கூறப்படுகிறது.
 
அதுக்கப்புறம் மேலிடம் பேசியதில் தான் சசிகலா புஷ்பா ஆடி போய்விட்டார், உளவுத்துறை அதிகாரி பாண்டியன், கார்டன்ல இருக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி ராம்லிங்கம், பிலால், டைப்பிஸ்ட் சங்கர் இவுங்கள வச்சு நீ எப்படி பதவிய பிடிச்ச எல்லாம் எங்களுக்குத் தெரியும் என மேலிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
 
குடும்ப சண்டைய எர்போர்ட்ல அரங்கேற்றிட்டு அத வச்சு அரசியல் செய்யுறியா? பிலால் வெளியில நிக்குறான் அவனக் கூப்பிட்டு உன் முன்னால எல்லா விஷயத்தையும் பேசச் சொல்லட்டுமா? என மேலிடம் அனைத்தையும் புட்டு புட்டு வைக்க சசிகலா புஷ்பாவின் சிவப்பு ஜாதகம் அனைத்தும் வெளிவந்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா - இலங்கை பாலத்தை குண்டு வைத்து தகர்ப்பேன்: இலங்கை எம்.பி. சர்ச்சை பேச்சு