தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம் வார்னிங்

Webdunia
வியாழன், 25 ஏப்ரல் 2019 (14:44 IST)
தமிழகத்தில் இன்னும் 3 நாட்களில் புயல் ஒன்று கரையைக் கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில், இதனையடுத்து ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. அதற்கு ஃபானி எனப் பெயரிடப்பட்டுள்ளது. 
 
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது 27 ஆம் தேதியில் இருந்து படிப்படியாக தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழகத்தில் அந்தப் புயல் கரையைக் கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கனமழை இருக்ககூடும். மேலும், தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1 ஆம் தேதி ரெட் அலர்ட் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகம். புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஏப்.30, மே 1-ல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments