நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth Karthick
ஞாயிறு, 25 மே 2025 (15:40 IST)

தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் நாளையும் ரெட் அலெர்ட் மற்றும் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர மாநிலங்களிலும், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களிலும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்ட நிலையில் காலை முதலே மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் நாளையும் கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர தேனி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் நாளை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்களுக்கு ஒன்னு சொல்றேன்!.. தவெகா போராட்டத்தில் போலீசை சீண்டிய புஸி ஆனந்த்!..

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments