வங்க கடலில் நாளை புயல் உருவாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ள நிலையில் நாளை புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்போதே சென்னை தொடங்கி கடலோர மாவட்டங்கள் பலவற்றில் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் நாளை புயல் சின்னம் உருவாக உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலானது டெல்டா மாவட்டங்களுக்கு அருகே கடல் பகுதியில் உருவாகும் நிலையில், டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அதுதவிர திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K