Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக மீட்பு வாகனங்கள்!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக   மீட்பு வாகனங்கள்!

J.Durai

, புதன், 31 ஜூலை 2024 (15:20 IST)
கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்டுள்ள இயற்கை பேரிடர் மீட்பு பணிக்காக கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலக வளாகத்திலிரிந்து மீட்பு வாகனங்கள் (Hitachi vehicle) மற்றும் குளிர் பெட்டிகள் (Freezer Box) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்பினர் இணைந்து இப்பணிகளை ஒருங்கிணைத்து நேற்று நள்ளிரவு மீட்பு வாகனங்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்கான குளிர் பெட்டிகள் ஆகியவற்றை கேரள மாநிலம் வயநாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
 
தொடர்ந்து நிவாரண பொருட்களை அனுப்புவதற்காக கோவை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும், கோவையில் உள்ள தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து பணிகளை துவங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுச்சேரி மாநிலத்தில் தனிநபர் வருமானம் கடந்த ஆண்டைவிட 7.61 சதவிகிதம் உயர்ந்துள்ளது - ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் !