ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிலையில், வரும் அக்டோபர் 16ஆம் தேதி பௌர்ணமி தினம் வருவதையடுத்து, கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
புரட்டாசி மாத பௌர்ணமி அக்டோபர் 16ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் காலை, அதாவது அக்டோபர் 17ஆம் தேதி மாலை 5:38 மணி வரை நீடிக்கிறது. இதனை அடுத்து, கிரிவலம் செல்ல தகுந்த நேரம் இதுதான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பக்தர்கள் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் வரலாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரவு 8 மணிக்கே பௌர்ணமி தொடங்குவதால், இரவு 8 மணிக்கு மேல் கிரிவலம் ஆரம்பித்து நள்ளிரவு அல்லது அதிகாலையில் முடித்து விடலாம் என்றும், அல்லது அதிகாலை ஆரம்பித்து எட்டு மணிக்குள் முடித்து விடலாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.