Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ.வின் உடல் ஏன் எரிக்கப்படவில்லை? - பரபரப்பு தகவல்கள்

ஜெ.வின் உடல் ஏன் எரிக்கப்படவில்லை? - பரபரப்பு தகவல்கள்
, புதன், 7 டிசம்பர் 2016 (13:48 IST)
உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் ஏன் தகனம் செய்யப்படாமல், புதைக்கப்பட்டது என்பதற்கான பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
முதல்வரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் சமாதிக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அய்யங்கார் வகுப்பை சேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும்
 
அந்த சமூகத்தில் ஒருவர் மரணம் அடைந்து விட்டால், வைதீக முறைப்படி அனைத்து விதமான சாஸ்திர, சம்பிரதாயங்களை செய்து,  இறுதிச் சடங்குகள் முடிந்த பின் உடலை எரித்து விடுவார்கள். 
 
இறந்து போன ஆத்மாவால் எந்த பிரச்சனைகளும் ஏற்படக்கூடாது என்பதற்காகவும், அந்த ஆத்மா மிக சுலபமாக மறுபிறவி எடுக்க வேண்டும் என்பதற்காகவும் பிராமணர்கள் இதைக் காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள்.
 
ஆனால், ஜெயலலிதாவின் உடல் தகனம் செய்யப்படாமல், புதைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம், புதைக்கப்பட்டால்தான் நினைவிடம் அமைக்க முடியும் என்பதே பிராதனமாக இருந்துள்ளதாக தெரிகிறது. 
 
ஏனெனில், மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் சமாதிக்கு அருகில் தனக்கு சமாதி எழுப்ப வேண்டும் என ஜெயலலிதா ஏற்கனவே அவரது தோழி சசிகலாவிடம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
மேலும், அதிமுக தீவிர விசுவாசிகள் மற்றும் பொதுமக்கள், சமாதிக்கு வந்து வணங்கி, வழிபட்டு செல்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
 
ஆனாலும், சாஸ்திர-சம்பிரதாய ரீதியாக ஏதும் தவறு நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், ஜெ. இறந்த பிறகு அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்று, அனைத்து பரிகார சடங்குகளும் செய்து முடிக்கப்பட்டதாக தெரிகிறது.
 
அதன் தொடச்சியாகத்தான், ஜெ.வின் ரத்த உறவான அவரது அண்ணன் மகன் தீபக் வரவழைக்கப்பட்டு, நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன் சில சடங்குகள் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா எப்படி இறந்தார்: சசிகலாவே விவரிக்கும் வீடியோ!