Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதற்காகவே ஹெலிகாப்டரை அனுப்பினார் நிர்மலா சீதாராமன்? : அதிர்ச்சி செய்தி

Advertiesment
இதற்காகவே ஹெலிகாப்டரை அனுப்பினார் நிர்மலா சீதாராமன்? : அதிர்ச்சி செய்தி
, வியாழன், 26 ஜூலை 2018 (09:54 IST)
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் குடி நோயால் பாதிக்கப்பட்டிந்த நிலையில், அவரை சென்னை கொண்டு வர மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஹெலிகாப்டர் உதவி செய்த விவகாரம் தெரிய வந்துள்ளது.

 
தன்னை சந்திக்க வந்த ஓ.பி.எஸ்-ஐ சந்திக்காமல் நிர்மலா சீதாராமன் திருப்பி அனுப்பிய விவகாரம்தான் தற்போது தலைப்பு செய்தியாக விவாதிக்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் இது பேசும் பொருளாக மாறியுள்ளது.
 
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரரை மதுரையிலிருந்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வர ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை கொடுத்து உதவி செய்த நிர்மலா சீதாராமனுக்கு நன்றி கூறவே, தான் டெல்லி வந்ததாக கூறி கொளுத்திப் போட்டார் ஓ.பி.எஸ். அதேபோல், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இந்த செய்தியை உறுதி செய்தார். 
 
இங்குதான் பிரச்சனை தொடங்கியது. அதாவது, ஓ.பி.எஸ்-ஸின் சகோதரர் பாலமுருகன் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் குடி நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு அடையாறில் உள்ள குடி நோய் மீட்பு மையம், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை என பல இடங்களில் சிகிச்சை அளித்து அவரால் அதிலிருந்து மீள முடியவில்லையாம். அவரின் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால், மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். 
webdunia

 
ஆனால், எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், சென்னை அப்போலோவுக்கு கொண்டு வர ஓ.பி.எஸ் முடிவெடுத்தாராம். அதற்காக ராணுவ ஆம்புலன்ஸ் உதவி கேட்டு ஓ.பி.எஸ் நிர்மலா சீதாராமனை தொடர்பு கொள்ள அவரின் அதை கொடுத்து உதவியுள்ளார்.
 
ஆனால், ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் என்பது முக்கிய அரசு பதவிகளில் உள்ளவர்கள் நோய்வாய்படும் போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆனால், நிர்மலா சீதாராமன் தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, விதிமுறை மீறிய விவகாரம் ஓ.பி.எஸ்-ஸும், எடப்பாடியும் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த போதுதான் அனைவருக்கும் தெரியவந்தது.
 
இப்படி உண்மையை வெளியே கூறி தன்னை சிக்கலில் மாட்டிவிட்டாரே என்கிற கோபத்தில்தான் அவரை சந்திக்காமல் நிர்மலா சீதாராமன் தவிர்த்தார் எனக்கூறப்படுகிறது.
 
ராணுவ ஹெலிகாப்டரை எப்படி தனி ஒருவருக்கு நிர்மலா கொடுக்கலாம். அவர் பதவி விலக வேண்டும் என தற்போது கோரிக்கை வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாய்லாந்து குகையில் இருந்து மீண்ட சிறுவர்கள் எடுத்த அதிர்ச்சி முடிவு