Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சரக்கு ஊத்தி கொடுத்து உல்லாசம்: ரியல் எஸ்டேட் பிரமுகரின் லீலை

Advertiesment
சரக்கு ஊத்தி கொடுத்து உல்லாசம்: ரியல் எஸ்டேட் பிரமுகரின் லீலை
, வெள்ளி, 3 மே 2019 (13:04 IST)
ஈரோடு மாவட்டம் எஸ்பியிடம் இளம்பெண் ஒருவர் எனது கணவனுக்கு மது ஊற்றி கொடுத்து ராதாகிருஷ்ணன் என்பவர் என்னை மிரட்டி என்னுடன் உறவுகொண்டுள்ளார் என பரபரப்பு புகார் அளித்துள்ளார். 
 
ராதாகிருஷ்ணன் ரியல் எஸ்டேட் பிரமுகர். இவர் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மிரட்டி ஐந்து முறை உடலுறவு கொண்டதாக அப்பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அந்த பெண் கூறியதாவது, 
 
என் கணவருக்கு மது வாங்கி கொடுத்து அவரை ராதாகிருஷ்ணன் அடிமையாக்கிவிட்டார். இதனால், எனக்கும் என் கணவருக்கும் இடையே சண்டை ஏற்படும். இதனால் ஒரு முறை நான் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். 
 
அப்போது மருத்துவமனைக்கு வந்த ராதாகிருஷ்ணன் என்னிடம் பணம் கொடுத்து இது போன்று தவறான முடிவை எடுக்க வேண்டாம் என ஆறுதல் கூறினார். அதன் பின்னர் ஒரு நாள் வீட்டிற்கு வந்து என்னை ராணி மாதிரி பார்த்துக்கொள்வதாக கூறி என்னிடம் எல்லை மீறினார். 
webdunia
அதன் பின்னர் என்னை மிரட்டி ஐந்து முறை என்னுடன் உடலுறவு கொண்டுள்ளார். ராதாகிருஷ்ணனுக்கு பயந்திருந்த நான் இனியும் முடியாது என்ற காரணத்தால் தற்போது புகார் அளிக்க வந்துள்ளேன் என தெரிவித்தார். 
 
இதற்கு முன்னர் ராதாகிருஷ்ணன் ஆபாச படம் எடுத்து மிரட்டியதாக கல்லூரி மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி தொகுதியில் தேர்தல் தள்ளிவைப்பு ? – வேட்புமனுக்கள் தள்ளுபடி எதிரொலி !