69 கோடியை திருப்பி அளிக்கிறோம்; பச்சமுத்துவை விடுதலை செய்யுங்கள்: மகன் புதிய மனு
69 கோடியை திருப்பி அளிக்கிறோம்; பச்சமுத்துவை விடுதலை செய்யுங்கள்: மகன் புதிய மனு
மருத்துவ சீட் வழங்குவதாக கூறி மாணவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்ததாக எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பச்சமுத்துவை காவல்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்த்துள்ளது.
இவரின் ஜாமின் மனு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் அவரது மகன் ரவி பச்சமுத்து புதிய மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், மருத்துவ சீட் வழங்குவதாக கூறி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 69 கோடி ரூபாயை திருப்பி அளிக்க தயார் எனவும், பச்சமுத்துவை விடுதலை செய்யவும் கோரிக்கை வைத்துள்ளார்.