Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம்.. ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு

Advertiesment
தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம்.. ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு

Mahendran

, புதன், 24 ஏப்ரல் 2024 (12:15 IST)
சென்னை பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி ஷர்மிளா தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது என கூறிய காவல்துறை அதிகாரிகள் உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் ஷர்மிளா தற்கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்,
 
முன்னதாக சென்னை பள்ளிக்கரணையில் சில மாதங்களுக்கு முன்பு பிரவீன் என்பவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார் என்ற நிலையில் அவருடைய மனைவி ஷர்மிளா நேற்று தற்கொலை செய்து கொண்டார். பிரவீன் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஷர்மிளாவினுடைய தந்தையையும் மற்றொரு சகோதரனையும் கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஷர்மிளாவின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேப் விடாமல் உறவுக்கு அழைத்த பெண்.. கோபத்தில் கொலை செய்த இளைஞர்! – கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!