Publish Date: Thu, 18 Mar 2021 (22:32 IST)
Updated Date: Thu, 18 Mar 2021 (22:33 IST)
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று கூட கிட்டத்தட்ட 1000 பேர் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்து உள்ளனர் என்பதும் அதில் சுமார் 400 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளை உடனடியாக மூட வேண்டும் என ரவிக்குமார் என்று வலியுறுத்தி உள்ளார். அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:
சென்னையில் கொரோனா மீண்டும் வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் கல்லூரிகளையும் மாணவர் விடுதிகளையும் திறந்து வைப்பது மாணவர்களின் உயிரோடு விளையாடுவது ஆகும்.
எனவே மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் தமிழக உயர் கல்வி செயலாளர் பொறுப்பு ஏற்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு உடனடியாக கல்லூரிகளை மூட வேண்டும் என ரவிக்குமார் என்று வலியுறுத்தியுள்ளார்
siva
Publish Date: Thu, 18 Mar 2021 (22:32 IST)
Updated Date: Thu, 18 Mar 2021 (22:33 IST)