Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது தவறான முடிவு: ரவிகுமார் எம்பி

Webdunia
திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (07:36 IST)
சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது மீண்டும் அங்கே கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கவே வழிசெய்யும். இந்தத் தவறான முடிவை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் ரவிகுமார் எம்பி தனது டுவிட்டரில் கேட்டு கொண்டுள்ளார்.
 
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து டாஸ்மாக் கடைகள் வரும் 18ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்றும், நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும், வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளி பின்பற்றுவது கட்டாயம் என்றும் தமிழக அரசு அறிவித்து இருந்தது
 
இந்த நிலையில் சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விசிக கட்சியின் எம்பி ரவிகுமார் தனது டுவிட்டரில், ‘சென்னையில் டாஸ்மாக் கடைகளைத் திறப்பது மீண்டும் அங்கே கொரோனா நோய்த்தொற்று அதிகரிக்கவே வழிசெய்யும். இந்தத் தவறான முடிவை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். 
 
ரவிகுமார் எம்பியின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது குறித்து மறுபரிசீலனை செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments