சென்னையில் எலி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பன்றி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் வரிசையில் எலி காய்ச்சல் தர்போது வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்த காய்ச்சலால் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எலியின் சிறுநீர் தண்ணீரில் கலப்பதாலும், தேங்கும் குப்பைகளாலும் எலி காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படுகிறது. எலி காய்ச்சலால் நமது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழக்கவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எலி காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.