Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்பானீஸ் பெண் வன்கொடுமை: இது தேசத்தின் அவமானம்- அமைச்சர் மனோ தங்கராஜ்

arrsted

Sinoj

, திங்கள், 4 மார்ச் 2024 (15:20 IST)
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த ஸ்பானீஸ் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ''கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா? ''என்று தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் ஜார்கண்ட மாநிலம், பாகர்பூரில் இருந்து தும்காவுக்கு இரவில் பைக்கில் ரெய்டு சென்றுள்ளார்.  நள்ளிரவு நெருங்கியதால் ஹன்சிதா மார்க்கெட் என்ற பகுதியில் அப்பெண் டென்ட் அடித்து தங்கியுள்ளார்.
 
அப்போது அங்கு வந்த சில இளைஞர்கள் ஸ்பானீஸ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தததாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து, பாதிக்கப்பட ஸ்பானீஷ் பெண் காவல் நிலையத்திற்குச் சென்று, ''தன்னை சில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், துன்புறுத்தியதாகவும்'' புகார் அளித்துள்ளார்.  
 
அதன்பின்னர், அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகச்சை பெற்று வருகிறார். 
 
''ஸ்பானிஸ் பெண் அளித்த புகாரின் அடிப்படையில்  3 இளைஞர்களை பிடித்த  போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து  தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூக வலைதளத்தில்,  
 
''66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதி வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா?
 
இது தேசத்தின் அவமானம். இந்த காட்டுமிராண்டி செயல்தான் பிரதமர்  நரேந்திரமோடி 
அவர்கள் பேசும் கலாச்சார பெருமையா? என்று கேள்வி  எழுப்பியுள்ளார்.

இந்த கொடூர சம்பவவம் தொடர்பாக  அப்பெண்ணும்  அவரது கணவரும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டு  வேதனை தெரிவித்திருந்தனர். அந்த வீடியோவையும் இப்பதிவில் அமைச்சர் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

போதைப்பொருள் கடத்தல் தமிழகத்திற்கு தலை குணிவை ஏற்படுத்துகிறது! - எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்!