பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Webdunia
ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (13:14 IST)
பொது இடங்களில் பொதுமக்கள் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.   இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் சற்றுமுன் வெளியான தகவலின் படி அந்த வகையில் சென்னை செங்கல்பட்டு கோவை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக வருவதை அடுத்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தற்போது அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தனி மனித இடைவெளியை கடைபிடித்து அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். ராணிப்பேட்டையில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI அனைத்து வேலைகளையும் செய்யும், இனிமேல் மனிதர்களுக்கு சுதந்திரம் தான்! எலான் மஸ்க்:

செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க என்னை ஏன் கூப்பிடவில்லை: செல்வப்பெருந்தகை ஆவேசம்..!

டெல்லி தாஜ் ஹோட்டலில் சர்ச்சை: 'பத்மாசனம்' போட்டு அமர்ந்த பெண்ணுக்கு அவமதிப்பு?

காலையில் குறைந்த தங்கம் மாலையில் மீண்டும் குறைவு.. இன்று ஒரே நாளில் ரூ.3680 சரிவு..!

இன்றிரவு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments