Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராம்குமார் மரணம்; நீதிபதியின் கேள்விக்கு சிறைத்துறை மவுனம்!

ராம்குமார் மரணம்; நீதிபதியின் கேள்விக்கு சிறைத்துறை மவுனம்!

ராம்குமார் மரணம்; நீதிபதியின் கேள்விக்கு சிறைத்துறை மவுனம்!
, திங்கள், 19 செப்டம்பர் 2016 (16:57 IST)
சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று மரணமடைந்தார். இவர் சிறையில் உள்ள மின்சார கம்பியை வாய் மற்றும் உடலில் திணித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.


 
 
ஆனால் ராம்குமார் தற்கொலை செய்துகொள்ளவில்லை. இது திட்டமிட்ட கொலை என பலரும் சந்தேகங்களை எழுப்பினர். இந்நிலையில் மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி இன்று காலை புழல் சிறைக்கு சென்று ஆய்வு நடத்தினார்.
 
இந்த ஆய்வின் போது மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி சிறைத்துறை அதிகாரிகளிடம் ராம்குமார் மரணம் குறித்து கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு பதிலளிக்க முடியாமல் சிறைத்துறை அதிகாரிகள் அமைதியாக இருந்துள்ளனர்.
 
சிறைக்காவலர் பேச்சிமுத்து, மற்றும் விசாரணை கைதிகளிடம் விசாரணை நடத்தி சில தகவல்களை மாஜிஸ்திரேட் தமிழ்செல்வி குறிப்பு எடுத்துள்ளார். இந்த ஆய்வின் அடிப்படையில் மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதால் இது சிறைத்துறை அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமார் பயந்தது நடந்துவிட்டது : கருணாநிதி பகீர் தகவல்