ராம்குமார் நீதிமன்றத்தில் கையெழுத்திட மறுப்பு
ராம்குமார் நீதிமன்றத்தில் கையெழுத்திட மறுப்பு
எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராம்குமார் கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை காவல் முடிந்து ராம்குமார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை சூளைமேட்டில் உள்ள மேன்சன் வருகைப் பதிவேட்டில் தான் கையெழுத்திடவில்லை என்றும் ராம்குமார் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.