Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உண்மைகளை வெளியே சொல்லிவிடுவார் என்றே ராம்குமார் கொல்லப்பட்டிருக்கலாம்?: சமூக ஆர்வலர்கள் கருத்து

உண்மைகளை வெளியே சொல்லிவிடுவார் என்றே ராம்குமார் கொல்லப்பட்டிருக்கலாம்?: சமூக ஆர்வலர்கள் கருத்து
, செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (17:16 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மின்கம்பியை கடித்து  தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது மரணங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துவருகின்றன. இந்நிலையில் இது குறித்து சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். அதில்


 

ராம்குமார் கைது செய்யப்படுபோது தற்கொலைக்கு முயன்றார் என்று காவல்துறையினர் கூறியபோது அவரை உயரிய பாதுகாப்பில் வைத்திருக்க வேண்டாமா? அதுமட்டுமின்றி அவருக்கு கவுன்சிலிங் அளிக்க மனநல மருத்துவரிடம் அல்லவா அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அவருடைய இரண்டு தற்கொலை சம்பவத்தை பார்க்கும்போது அவர் அப்படிச் செய்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

ராம்குமாருக்கு ஒருவேளை ஜாமீன் கிடைத்து, அவர் வெளியில் வந்தால் இந்த வழக்குச் சம்பந்தமான உண்மைகளை மீடியாவிடம் சொல்லிவிடலாம் என்று பயந்தே அவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் வலுவாக கிளம்வதும் ஏற்கத்தக்கதே. இதில் நடந்த உண்மைகள் காவலர்களுக்கு மட்டுமே தெரியும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!