Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் தான் குற்றவாளி என காட்டிக்கொடுக்கும் விஞ்ஞானம்

Webdunia
சனி, 16 ஜூலை 2016 (09:13 IST)
தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் தான் கொலை செய்தார் எனவும், ராம்குமார் தான் சுவாதியை பல நாட்களாக பின் தொடர்ந்தார் என்பதற்கான விஞ்ஞானப்பூர்வ ஆதரங்கள் உள்ளன.


 
 
சுவாதி கொலை வழக்கு மக்களால் மிக கூர்மையாக கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் காவல்துறை விசாரணையில் சுவாதியை கொலை செய்ததை ராம்குமார் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வருகின்றன. ராம்குமாரின் வழக்கறிஞரும், அவரின் தந்தையும் ராம்குமார் கொலை செய்யவில்லை எனவும், காவல்துறை ராம்குமாரை பலிகடா ஆக்குகிறது என கூறுகின்றனர்.
 
ஆனால் ராம்குமார் தான் கொலை செய்தார் எனவும், அவரை பின் தொடர்ந்த அந்த நபரும், சுவாதி தனது நன்பர்களிடம் தன்னை ஒருவன் பின் தொடர்வதாக கூறிய நபரும் ராம்குமார் தான் என்பதை ராம்குமாரின் செல்போன் அலைவரிசை காட்டிக்கொடுக்கிறது.
 
ராம்குமார் சுவாதியை பலமுறை பின் தொடர்ந்துள்ளார். ராம்குமார் பின் தொடர்ந்து வரும்போது சுவாதி தனது நண்பரான பிலால் மாலிக்கிற்கு, கறுப்பாக, ஒல்லியாக ஒருவன் என்னைப் பின் தொடர்கிறான் என மெஸ்ஸேஜ் அனுப்பி கூறியுள்ளார்.
 
சுவாதி தன்னை பின் தொடர்ந்த நபரை பற்றி பிலாலுக்கு மெசேஜ்களை அனுப்பும் நேரத்தில் ராம்குமார் இருந்த இடமும், சுவாதி இருந்த இடமும் ஒன்று என துல்லியமாகக் காட்டுகிறது செல்போன் டவர். நுங்கம்பாக்கத்தில் இருந்து பரனூர் வரையில் சுவாதியைப் பின் தொடர்ந்துள்ளார் ராம்குமார்.
 
அதிலும் முக்கியமாக கொலை நடந்தபோது சுவாதியின் செல்போன் டவரும் ராம்குமாரின் செல்போன் டவரும் ஒரே இடத்தைக் காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments