Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாதியின் பின்னால் நெருங்கி நின்ற ராம்குமார்; தர்மசங்கடத்தில் தவித்த சுவாதி: பகீர் தகவல்

சுவாதியின் பின்னால் நெருங்கி நின்ற ராம்குமார்; தர்மசங்கடத்தில் தவித்த சுவாதி: பகீர் தகவல்
, திங்கள், 11 ஜூலை 2016 (14:55 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24-ஆம் தேதி இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.


 
 
ராம்குமார் கைது செய்யப்பட்டதும், அவர் கொலை செய்ததற்கான காரணங்கள் என பல செய்திகள் உலா வந்தன. ஒருதலை காதல், இருவரும் நண்பர்களாக பழகியவர்கள் என பல கருத்துக்கள் வந்தன. ஆனால் இந்த வழக்கில் ராம்குமார் குறித்த பல சந்தேகங்களுக்கு தற்போது காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் பதில் கூறியுள்ளார்.
 
சுவாதியின் நண்பர் பிலால் மாலிக் தான் அவரை கொலை செய்திருக்க கூடும் என காவல் துறை தரப்பில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் பிலால் மாலிக்கிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ராம்குமாரை பிடித்ததாக கூறப்படுகிறது.
 
சுவாதி வேலைக்கு செல்லும் போது அவரை வழியில் பார்த்து அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு சுவாதியின் பின்னால் சுற்றியிருக்கிறார் ராம்குமார். சுவாதி செல்லும் பெருமாள் கோயிலுக்கும் சுவாதியை பின் தொடர்ந்துள்ளார் அவர்.
 
தன்னை ஒருவன் பின் தொடர்ந்து வருவதாகவும், அவன் கறுப்பாக, ஒல்லியாக கிராமத்து சாயலில் உள்ள கட்டட வேலைப்பார்க்கும் இளைஞன் போல் இருப்பதாக சுவாதி தனது நண்பர் பிலால் மாலிக்கிடம் கூறியுள்ளார்.
 
மேலும் ஒரு நாள் டிக்கெட் எடுக்க வரிசையில் நிற்கும் போது, சுவாதியின் பின்னால், மிக நெருக்கமாக அவன் நின்றதாகவும், தான் தர்ம சங்கடத்தில் தவித்ததாக சுவாதி கூறியுள்ளார். சுவாதி தன்னை பின் தொடர்ந்து வந்த அந்த இளைஞரை பற்றி தனது நண்பருக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்துள்ளார். அந்த எஸ்.எம்.எஸ்.கள் காவல்துறை வசம் தற்போது உள்ளதாக அந்த உயர் அதிகாரி கூறியுள்ளார்.
 
சுவாதியின் பின்னால் சுற்றுவதையே ராம்குமார் வேலையாக செய்து வந்துள்ளார். சுவாதி வேலை பார்க்கும் பரனூர் வரை சென்று திரும்புவாராம் ராம்குமார். இந்நிலையில் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி ராம்குமாரின் டார்ச்சர் தாங்க முடியாமல் தன்னுடைய நெருங்கிய நண்பருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார் சுவாதி.
 
மறுநாள் அந்த நண்பர் சுவாதியுடன் இருப்பதை பார்த்த ராம்குமார் அமைதியாக இருந்துள்ளார். பின்னர் சுவாதி தனது தந்தையுடன் ரயில் நிலையம் வர ஆரம்பித்துள்ளார். ஆனாலும் ராம்குமார் சுவாதியை பின் தொடர்வதை நிறுத்தவில்லை.
 
ஒருநாள் சுவாதியிடம் வந்து தனது காதலை கூறியுள்ளார் ராம்குமார். அப்பொழுது சுவாதி ராம்குமாரை தேவாங்கு போல் இருப்பதாகவும் கூறி திட்டியுள்ளார். இது தான் சுவாதியை ராம்குமார் திட்ட முக்கிய காரணம் என அந்த உயர் அதிகாரி கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம்குமார் புகைப்படத்தை வெளியிட்டு விட்டு அணிவகுப்பு நடத்துவது சட்டவிரோதமானது : வழக்கறிஞர் ராமராஜ்