ராம்குமார் உடலில் காயங்கள்: தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு!
ராம்குமார் உடலில் காயங்கள்: தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு!
Publish Date: Sat, 01 Oct 2016 (14:55 IST)
Updated Date: Sat, 01 Oct 2016 (14:58 IST)
சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் ராம்குமாரின் தந்தை பரபரப்பு குற்றச்சட்டை வைத்துள்ளார்.
12 நாள் போராட்டத்திற்கு பின்னர் ராம்குமாரின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. தனியார் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை குழுவில் இடம்பெற வேண்டும் என அவரது தந்தையின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அதற்கு பதிலாக எயிம்ஸ் மருத்துவர் அனுமதிக்கப்பட்டு இந்த பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராம்குமாரின் தந்தை பரமசிவம், ராம்குமாரின் உடலில் காயங்கள் உள்ளன என்ற பரபரப்பு தகவலை கூறியுள்ளார். மேலும், ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்னர் அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.