Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரம்ஜான் பண்டிகைக்காக பள்ளி தேர்வு தேதி மாற்றம்.. கோடை விடுமுறை தொடங்குவது எப்போது?

Siva
வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (08:23 IST)
ரம்ஜான் பண்டிகைக்காக ஒரு சில தேர்வுகள் தேதி மாற்றப்பட்டுள்ள நிலையில் கோடை விடுமுறை எப்போது என்பது குறித்த தகவலையும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடத்தப்படும் என்றும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஏப்ரல் 13 முதல் நடத்தப்படும் வழங்கப்படும் என்றும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதன்படி ஏப்ரல் 10, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்ற தேர்வுகள் ஏப்ரல் 22, 23 தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அளித்த விளக்கத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் ஐந்தாம் தேதி உடன் முழு ஆண்டு தேர்வு முடிவடைந்து விடும் என்றும் அவர்களுக்கு ஏப்ரல் ஆறாம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது

நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் 21ஆம் தேதி வரை ரம்ஜான் மற்றும் தேர்தல் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் இந்த மாணவர்களுக்கு ஏப்ரல் 22, 23 தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என்றும் ஏப்ரல் 24 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments