Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாணவர்களுக்கு அலர்ட்..! தமிழகத்தில் தேர்வு தேதிகள் மாற்றம்..!!

Advertiesment
12 Two exam

Senthil Velan

, சனி, 30 மார்ச் 2024 (12:00 IST)
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு மற்றும் 3-ம் பருவத் தேர்வு ஏப்ரல் 18 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்படும் என்று வருடாந்திர அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இதற்கிடையே, தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதிநடைபெற உள்ளது. எனவே, தேர்தலுக்கு முன்பாக பள்ளி தேர்வுகளை நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
 
புதிய தேர்வுக் கால அட்டவணையைபள்ளிக்கல்வித் துறை வெளியிட்டிருந்தது. அதன்படி 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 2023-24 கல்வி ஆண்டுக்கான இறுதி தேர்வுகள் ஏப்ரல் 2 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் என்றும் ஏப்ரல் 13-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 4 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

 
ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வு ஏப்ரல் 22 ஆம் தேதிக்கும், ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவிருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23 ஆம் தேதிக்கு மாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரான் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்: பாகிஸ்தான் மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை..!