Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவ பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; எரித்துக் கொலை! – ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
புதன், 25 மே 2022 (09:55 IST)
ராமேஸ்வரத்தில் கடல்பாசி சேகரிக்க சென்ற மீனவ பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் 45 வயதான பெண் சந்திரா. இவர் அப்பகுதியில் கடல்பாசியை சேகரிக்க சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் கிராம மக்கள் பல பகுதிகளிலும் தேடியுள்ளனர்.

ஆனால் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சந்திரா பாசி சேகரிக்க செல்லும்போது அப்பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் சிலர் அடிக்கடி அவரிடம் கேலி, கிண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் வடமாநில தொழிலாளர்கள் 6 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இறால் பண்ணை அருகே உள்ள காட்டுப்பகுதியில் சந்திரா உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சந்திரா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவும் நிலையில் பொதுமக்கள் வட மாநில தொழிலாளர்களை தாக்கியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதுடன், சந்திரா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அதிரடியில் இறங்கிய காவல்துறை! ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை சுட்டுப் பிடித்த போலீஸ்! - சென்னையில் பரபரப்பு!

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்