எட்டு வழிச்சாலை குறித்து சமீபத்தில் வெளிவந்த நீதிமன்ற தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த தீர்ப்பை அடுத்து எட்டு வழிச்சாலை திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் அறிவிப்பால் சேலம், தருமபுரி பகுதியின் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்
இந்த நிலையில் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக வழக்கை நடத்தியதில் பாமகவுக்கு பெரும் பங்கு உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி இந்த வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்தால் தங்களுக்கு தகவல் தரவேண்டும் என்று பாமக தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் பாமக இந்த வழக்கை விவசாயிகள் ஒவ்வொருவரிடமும் ரூ.2000ஐ பெற்று கொண்டு நடத்தியதாகவும், பாமக தனது சொந்த பணத்தில் இந்த வழக்கை நடத்தவில்லை என்றும் பிரபல அரசியல்வாதி ஒருவர் கருத்து தெரிவித்தார். இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமாதஸிடம் செய்தியாளர்களிடம் கேள்வியெழுப்பியபோது, 'அறிவில்லாதவர்கள், முண்டங்கள் தான் இதுமாதிரி கேள்வியை எழுப்புவார்கள். இதுபோன்ற கருத்துக்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தரக்கூடாது' என்று ஆவேசமாக கூறினார்.