கடையை திறந்தால் அடித்து நொறுக்குவோம்! – தர்ணாவில் இறங்கிய பெண்கள்!

Webdunia
வியாழன், 7 மே 2020 (13:57 IST)
ராமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையை திறந்தால் அடித்து உடைப்போம் என பெண்கள் போராட்டத்தில் இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் 42 நாட்கள் கழித்து சென்னை உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளம் கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை திறக்க ஊழியர்கள் வந்தபோது பெண்கள் பலர் அவர்களை மறித்து கடையை திறக்கக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கு விரைந்த போலீஸார் அந்த பெண்களிடம் சமாதான பேச்சு வார்த்தைக்கு முயன்றுள்ளனர். ஆனால் மதுக்கடையை திறந்தால் அடித்து நொறுக்குவோம் என பெண்கள் மதுக்கடைக்கு முன்னால் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்த பலர் மீண்டும் கடையை திறந்தால் தங்கள் குடும்பம் நடுவீதிக்கு சென்று விடும் என வேண்டி கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் பேச்சுவார்த்தை முடிவில் மதுபானக்கடையை மூடுவதாக முடிவெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments