Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணியா.. இன்னும் டைம் இருக்கு... அதிமுகவுக்கு வார்னிங் கொடுக்கும் பாமக!

Webdunia
வெள்ளி, 6 மார்ச் 2020 (16:54 IST)
கூட்டணி குறித்து இன்னும் ஆறு மாதம் கழித்து தான் முடிவெடுக்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
 
ரஜினிகாந்த் வரும் ஏப்ரல் மாதம் அரசியல் கட்சி தொடங்குவார் என்றும், ஆகஸ்ட் மாதம் பொதுக் கூட்டம் நடத்துவார் என்றும், செப்டம்பர் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்வார் என்றும் தமிழருவி மணியன் தெரிவித்தார்.  
 
மேலும், பாமக இவருடன் கூட்டணி வைக்கும் என்றும், தமிழருவி மணியன் தெரிவித்திருந்தார். தமிழருவி மணியனின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து கமல் ரஜினியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.  
 
இந்நிலையில் ரஜினி, கமல், பாமக ஆகியோர் இணைந்து மூன்றாம் அணி அமைக்க வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி அமைந்தால் அது ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை திமுக பக்கம் முழுதாக சேரவிடாமல் தடுக்கும் என தெரிகிறது என அரசியலில் பேசப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக 234 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்தி வருவதாகவும். கூட்டணி குறித்து ஆறு மாதம் கழித்துதான் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இது அதிமுகவிற்கு கொடுக்கப்பட்ட வார்னிங் என நெருங்கிய வட்டாரங்கள் பேசுகின்றன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments