Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்களை ரொம்ப காதலிக்கிறேன்! – ஓப்பனாக சொன்ன ராமதாஸ்!

Advertiesment
உங்களை ரொம்ப காதலிக்கிறேன்! – ஓப்பனாக சொன்ன ராமதாஸ்!
, புதன், 12 பிப்ரவரி 2020 (09:10 IST)
பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ் காதலிப்பதாக கூறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 14 உலகம் முழுவதும் காதலர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக பலரும் தனக்கு பிடித்தவர்களிடம் காதலை தெரிவித்து வரும் நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வித்தியாசமான ஒரு காதல் முன்மொழிவை வைத்துள்ளார்.

நேற்று பாமக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாமக பத்திரிக்கையாளர்கள் மீதும், ஊடகங்கள் மீதும் மிகுந்த காதல் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். இதை கேட்டதும் பத்திரிக்கையாளர்கள் ஆச்சர்யமடைந்தனர். தொடர்ந்து பேசிய ராமதாஸ், ஆனால் பாமகவின் காதல் ஒருதலையாகவே இருப்பதாகவும், ஊடகங்கள் பாமகவை தொடர்ந்து தவிர்த்து வருவதாகவும், இதை இருதலை காதலாக மாற்ற பத்திரிக்கையாளர்கள் முன் வரவேண்டும் எனவும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவனை நம்பி குழந்தைகளை விட்டுச்சென்ற மனைவி – வீடுவந்த போது அதிர்ச்சி !