Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிலஅபகரிப்பு புகாரில் சிக்கிய ராமதாஸ் மகள்

Advertiesment
நிலஅபகரிப்பு புகாரில் சிக்கிய ராமதாஸ் மகள்
, செவ்வாய், 12 ஜூலை 2016 (06:31 IST)
பாமக நிறுவனர் ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்தி மீது நிலஅபகரிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

 
திண்டிவனத்தைச் சேர்ந்த ஆனந்தாயி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், திண்டிவனம், கோனேரிகுப்பத்தில் எனக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் 90 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பாமக நிறுவனர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி மோசடி செய்துள்ளார்.
 
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய  நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இதனால், எதிரிகள் தரப்பில், எனக்கு கொலை மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளனர். எனவே, எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார். 
 
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து  விளக்கம் அளிக்குமாறு விழுப்பும் நில அபகரிப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான வழக்கை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேமுதிகவுக்கு குட்பை சொன்ன மாவட்டச் செயலாளார்