Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எனது குருநாதருக்கும்.. ரசிகர்களுக்கு இந்த விருது சமர்ப்பணம்! – ரஜினி நெகிழ்ச்சி ட்வீட்!

Advertiesment
எனது குருநாதருக்கும்.. ரசிகர்களுக்கு இந்த விருது சமர்ப்பணம்! – ரஜினி நெகிழ்ச்சி ட்வீட்!
, வியாழன், 1 ஏப்ரல் 2021 (13:47 IST)
திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது தனக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனக்கு இந்த விருதை அளித்த மத்திய அரசிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் தனது நடிப்பு திறனை ஊக்குவித்த சக டிரைவரான நண்பர் ராஜ் பகதூர், வறுமையில் உதவிய தன் அண்ணன் சத்யநாராயண ராவ், தனக்கு திரைத்துறையில் வாய்ப்பளித்த குருநாதர் எஸ்.பாலசந்தர் மற்றும் திரையுலகினர், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், தனது ரசிகர்களுக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்வதாக கூறியுள்ளார்.

மேலும் தனக்கு இந்த விருது கிடைத்ததற்காக வாழ்த்திய முதல்வர் பழனிசாமி, மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்ட பலருக்கும் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமித்ஷாவின் வாகன பிரச்சாரத்தை பார்க்க வந்த பெண் வாய்க்காலில் விழுந்து பரிதாபம்!