Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறாரா ரஜினி? – நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை!

Advertiesment
சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்கிறாரா ரஜினி? – நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை!
, ஞாயிறு, 29 நவம்பர் 2020 (09:03 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில் நடிகர் ரஜினி தனது மன்ற நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

தமிழகத்தில் எதிர்வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. புதிதாக தொடங்கப்பட்ட கட்சிகள் கூட பெரிய கட்சிகளுடன் கூட்டணி, தேர்தல் பரப்புரை ஆகியவற்றிற்கு தயாராகி வரும் நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் அரசியல் வருகை தள்ளிக் கொண்டே போகிறது.

இந்த சட்டமன்ற தேர்தலில் ரஜினி கட்சி ஆரம்பித்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது உடல்நலன் காரணமாகவும், கொரோனா காரணமாகவும் அவர் கட்சி தொடங்கும் பணிகள் தாமதமாகி இருப்பதாக தெரிகிறது. இதனால் ரஜினி கட்சி தொடங்குவாரா? இல்லையா? என்ற கேள்வி அவரது தொண்டர்களுக்கே எழுந்துள்ள நிலையில் நாளை தனது மன்ற நிர்வாகிகளோடு ரஜினிகாந்த் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமேல் மாஸ்க் அணியாதவர்கள் மேல் கடும் நடவடிக்கை! – தலைமை செயலர் அறிவிப்பு!