Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியை தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்: சரத்குமார்

Webdunia
வியாழன், 31 மே 2018 (09:04 IST)
ஸ்டெர்லைட் போராட்டாம் குறித்தும் போராட்டக்காரர்கள் குறித்தும் நேற்று தூத்துகுடியில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ரஜினியை தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று நடிகரும் அகில இந்திய சமத்தூவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
 
போராட்டக்காரர்களிடையே சமூக விரோதிகள் ஊடுருவி போலீசை தாக்கியதால் தான் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாகவும், அந்த சமூக விரோதிகளை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நேற்று தூத்துகுடிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் கூறினார். மேலும் எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும் என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.
 
இந்த நிலையில் ரஜினியை அவ்வப்போது கடுமையாக விமர்சனம் செய்து வரும் நடிகர் சரத்குமார், ரஜினியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 
மனிதனுக்கு போராட உரிமை இல்லையா? தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினி கூறியது கண்டனத்துக்குரியது. அவரை தேச துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று சற்றுமுன் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியுள்ளார் 
 
சரத்குமாரின் இந்த பேட்டிக்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments