Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்தநாளில் கட்சி தொடங்குகிறாரா ரஜினிகாந்த் ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு !

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2019 (15:35 IST)
இந்தியாவில் உள்ள அத்துணை ஊடகத்திற்கும் ஒரு பெரும் தீனி என்னவென்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போ அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பிப்பார் என்பதுதான்.
பெருவாரியான மக்கள் செல்வாக்கு கொண்டுள்ள ரஜினி இன்னும் நட்சத்திர செல்வாக்கை விட்டு கீழிறங்கி வரவில்லை. அதனால் என்னவோ அவரது ரசிகர்களைத் தவிர , வெகு ஜனங்கள் ரஜினி எப்போது கட்சி தொடங்கினால் எங்களுக்கு என்ன ? என நொந்து கொள்கின்றனர்.
 
இந்த நிலையில், ’எங்கள் தலைவர் ரஜினிகாந்த் ‘அரசியல் கட்சி தொடங்கினால் அடுத்து முதல்வர் அவர்தான் என அவரது ரசிகர்கள் கனவுக் கோட்டை கட்டி உள்ளனர்.
 
இந்த நிலையில் வீட்டிலிருந்தபடி பேட்டிகொடுத்து அரசியல் நிலவரத்தை சூடு பிடிக்க வைக்கிறார் எனவும் ரஜினி மீது விமர்சனங்கள் உண்டு.
 
இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  ரஜினி, கமலை சரமாரியாக விமர்சித்துள்ளார்.
அதில்,மக்கள் பணத்தில் சம்பாதித்து, வயதானதும் வாய்ப்புகள் ஏதுமின்றி ரஜினி கமல் இருவரும் அரசியலுக்கு வருகிறார்கள் என கூறியுள்ளார்.
 
முதல்வர் சொன்னதை அப்படியே வைத்துக்கொண்டாலும், ரஜினி, கமல் ஆகிய இருபெரும் நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் மக்களுக்கு செய்துள்ள சேவை, பொதுத்தொண்டுகள், உதவிகளை மறந்துவிட முடியாது.
 
இந்த நிலையில், வரும் டிசம்பர் 12 ஆம்தேதி, ரஜினி தன்  69 வது பிறந்தநாளின்  போது புதுக்கட்சி தொடங்குவாரா என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ரஜினி தரப்பில் இதுவரை அதிகாரப் பூர்வமாக எந்த அறிவிப்பும் இல்லை.

ஆனால்,  அரசியலில் நுழைவதற்கு முன் அதிலுள்ள சாதக பாதகங்களை உன்னிப்பாக கவனித்து அதன் பின் தான் ரஜினி கட்சி தொடங்குவார் என்றும், நிச்சயமாக அடுத்த சட்டசபைத் தேர்தலுக்குள்  அவர் கட்சி தொடங்கி விடுவார் எனவும்   அரசியல்  விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments