Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்தில் பேட்டி கொடுக்காமல் நழுவிய ரஜினிகாந்த்

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (13:01 IST)
ஒரு பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இன்னொரு பக்கம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்தின் அறிமுக காட்சி மற்றும் அறிமுகப் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது
 
இந்த நிலையில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய அவரிடம் ’தர்பார் படம் குறித்தும், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்தும்,  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் குறித்தும் கேள்விகள் கேட்க செய்தியாளர்கள் பலர் காத்திருந்தனர் 
 
ஆனால் செய்தியாளர்களிடம் நேராக வந்த ரஜினிகாந்த் ’அனைவருக்கும் எனது பொங்கல் வாழ்த்துகள்’ என்று மட்டும் கூறி விட்டு உடனடியாக நழுவி விட்டார். நாளை ’தர்பார் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று செய்தியாளர்களிடம் தேவையில்லாமல் பேட்டி கொடுக்க வேண்டாம் என்பதற்காகவே அவர் நழுவிட்டதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments