Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ராஜா, கனிமொழி குறித்த கேள்விகளை தவிர்த்த ரஜினிகாந்த்

Webdunia
செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (08:11 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்தபோது தனக்கு பின்னால் ஆண்டவனும் மக்களும் இருப்பதாகவும், பாஜக இல்லை என்றும், கூறினார். அதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தமிழக மக்களின் கோபத்துக்கு மத்திய அரசு ஆளாகும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் அவர் பாஜக ஆதரவாளர் என்பது நேற்றைய பேட்டியில் தெரிவதாக சில அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். நிர்மலாதேவி, எஸ்.விசேகர், மற்றும் சீருடை அணிந்த போலீசாரை தாக்கியது, பாரதிராஜா ஆகியோர் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினி, கனிமொழி மற்றும் கருணாநிதி குறித்து எச்.ராஜா பதிவு செய்த ஒரு கருத்து குறித்த கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துவிட்டார்.

அதேபோல் பாஜக ஆதரவாளரான குருமூர்த்தி சந்திப்பு குறித்த கேள்விக்கும் அவர் மழுப்பலாகவே பதிலளித்தார். ஆன்மீக அரசியலில் அடியெடுத்து  வைக்கப்போகும் ரஜினிகாந்த், தனிப்பாதையில் செல்வாரா? அல்லது பாஜக ஆதரவு நிலையை தொடர்ந்து எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments