Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்காக மக்கள் சேவை கட்சியை பதிவு செய்தது யார்?

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (13:07 IST)
மக்கள் சேவை கட்சியை பதிவு செய்தது தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கட்சி பெயர், சின்னம் உள்ளிட்டவை குறித்தும், கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவது குறித்து ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டார்.
 
அதற்கு பிறகு ரஜினி தொடங்கும் புதிய கட்சியின் பெயர் “மக்கள் சேவை கட்சி” என்று பெயரிடப்பட்டுள்ளதாக தற்போது அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு சின்னமாக பாபா திரைப்படத்தில் ரஜினி காட்டு இரட்டை விரல் சின்னம் கோரப்பட்டதாகவும் ஆனால் அதை மறுத்துள்ள தேர்தல் ஆணையம் அதற்கு பதிலாக ஆட்டோவை சின்னமாக வழங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் ரஜினி துவங்க இருக்கும் கட்சியின் பெயர் “மக்கள் சேவை கட்சி” என கூறப்பட்டு வந்த நிலையில் மக்கள் சேவை கட்சியை பதிவு செய்தது தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளரின் சென்னை வீட்டு முகவரியில் மக்கள் சேவை கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments