சென்னையில் நேற்று பிரபல பட்டிமன்ற பேச்சாளர் சாலமன்பாப்பையா எழுதிய ’புறநானூறு புதிய வரிசை வகை’ என்ற நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், அமைச்சர் மாபா. பாண்டியராஜன், திருச்சி சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய திருச்சி சிவா, 'சாலமன் பாப்பையா எழுதிய இந்த நூல் எல்லா அரசு நூலகங்களிலும் வைக்கப்பட வேண்டும். அப்படி வைக்கப்படவில்லை என்றால் விரைவில் தளபதி முதல்வராக வருவார், அப்போது இந்த நூல் நூலகங்களில் வைக்கப்படும் என்று கூறினார்.
அடுத்த பேச வந்த அமைச்சர் மாபா.பாண்டியராஜன், 'தளபதி வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் ஆட்சியிலேயே அனைத்து நூலகங்களிலும் இந்த நூல் கிடைக்கும்படி செய்வோம், அதுமட்டுமின்றி அனைவரையும் படிக்க வைக்கவும் ஏற்பாடு செய்வோம் என்று கூறினார்
அடுத்து பேச வந்த நடிகர் ரஜினிகாந்த், 'சிவா அவர்கள் பேசியபோது தளபதி வருவாரு, அப்போ இந்த நூல் நூலகங்களில் கிடைக்கும் என்று கூறினார். உடனே அமைச்சர் மாபா பாண்டியராஜன் பதறிப்போய் உடனே நூலகங்களில் இந்த நூலை வைக்க ஒப்புக்கொண்டார். மொத்தத்தில் இந்த நூல் நூலகங்களுக்கு செல்வது உறுதியாகிவிட்டது. அதற்கு என் சந்தோஷம்' என்று நகைச்சுவையாக கூறினார். மேலும் காலம் பேசாது, எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்லும் என்று கூறி சாலமன் பாப்பையாவின் பேச்சுத்திறனையும் அவர் தனது 'வேலைக்காரன்' பட விழாவில் பேசியதையும் பெருமையாக குறிப்பிட்டார்.