Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைமை அலுவலகத்தை மூட ரஜினி திடீர் முடிவு: ரசிகர்கள் அதிர்ச்சி

Advertiesment
தலைமை அலுவலகத்தை மூட ரஜினி திடீர் முடிவு: ரசிகர்கள் அதிர்ச்சி
, திங்கள், 2 ஜூலை 2018 (22:20 IST)
ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில் விரைவில் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் தனது கட்சி அறிவிப்பை  வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை அலுவலகமாக சென்னையில் உள்ள ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபத்தின் ஒரு பகுதி செயல்பட்டு வருகிறார். இங்குதான் ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர். உறுப்பினர் சேர்க்கைகள், ஆலோசனைகள் உள்ளிட்ட வேலைகள் இந்த அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
 
webdunia
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனம் குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருவதாக வட மாநிலத்தில் படப்பிடிப்பில் உள்ள ரஜினியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் இதனால் அதிருப்தியான ரஜினிகாந்த், தலைமை  தலைமை அலுவலகத்தை இழுத்து மூட உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினி சென்னை திரும்பியதும் பிரச்சனைகள் பேசி சரிசெய்த பின்னரே தலைமை அலுவலகம் திறக்கப்படும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைலாஷ் யாத்திரைக்கு சென்ற 19 சென்னை பக்தர்களுக்கு திடீர் சிக்கல்