தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நீதிமன்ற உத்தரவிற்கு பின் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தங்களுடைய வாக்குகளை நடிகர், நடிகைகள் மிகுந்த ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது வாக்கை பதிவு செய்ய முடியாத நிலைக்கு வருந்துவதாக நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது:
நான் தற்போது மும்பையில் படப்பிடிப்பில் இருக்கின்றேன். இன்று மாலை 6.45 மணிக்குத்தான் நடிகர் சங்கத்தின் இருந்து அனுப்பப்பட்ட தபால் வாக்கு எனக்கு கிடைத்தது. எனவே காலதாமதம் காரணமாக நான் என்னுடைய வாக்கை பதிவு செய்ய முடியாத நிலையில் உள்ளேன். இது எதிர்பாராமல் நடந்த ஒரு துரதிஷ்டமான சம்பவம் ஆகும்., இனிமேல் இவ்வாறு நடக்காது என்று நினைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் வேண்டுமென்றே ரஜினிக்கு தாமதமாக தபால் வாக்குகளை அனுப்பியிருப்பதாக நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.