Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயகாந்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது! தீவுத்திடலில் அஞ்சலி செய்த ரஜினிகாந்த் பேட்டி..!

Webdunia
வெள்ளி, 29 டிசம்பர் 2023 (10:47 IST)
கேப்டன் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில் ஏராளமான அரசியல் பிரபலங்கள் திரையுலக பிரபலங்கள் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது அவரது உடல் சென்னை தீவு திடலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தகுந்த பாதுகாப்புடன் பொதுமக்கள் அஞ்சலி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூத்துக்குடியில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பில் இருந்த நிலையில் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். இன்று காலை அவர் தீவு திடல் சென்று விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது  விஜயகாந்த்தை இழந்தது மிகப்பெரிய துரதிஷ்டம். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. அவருடைய அசாத்திய மன உறுதி காரணமாக எப்படியும் உடல்நிலை தேறி வந்து விடுவார் என்று தான் நினைத்தேன். ஆனால் சமீபத்தில் நடந்த பொது குழுவில் அவரை பார்த்தபோது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை குறைந்துவிட்டது.

 
கேப்டன் என்பது பொருத்தமான பெயர்,  நட்புக்கு இலக்கணம் என்றால் விஜயகாந்த் தான். விஜயகாந்த்-ன் அன்புக்கு எல்லோரும் அடிமையாகிவிடுவோம். விஜயகாந்த்-ன் கோபத்திற்கு பின்னால் நியாயம் இருக்கும், சுயநலம் இருக்காது, வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நின்றவர் விஜயகாந்த்
 
அவர் மட்டும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக இருந்திருப்பார். தமிழக மக்கள் அந்த பாக்கியத்தை இழந்துவிட்டனர். அவர் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments