Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீமான் கட்சியினர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்

Advertiesment
ரஜினிகாந்த்
, புதன், 11 ஏப்ரல் 2018 (09:46 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் செய்த அட்டகாசத்திற்கு அளவே இல்லை என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது
 
தமிழர்களுக்காக போராடுவதாக சொல்லி கொள்ளும் நாம் தமிழர் கட்சியினர் நேற்று நடந்த போராட்டத்தின்போது தமிழர்களையே தாக்கியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. குறிப்பாக சிஎஸ்கே பனியன் அணிந்தவர்களை கண்மூடித்தனமான நாம் தமிழர் கட்சியினர் தாக்கியது தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கனவே அந்த கட்சிக்கு டெபாசிட் கூட கிடைக்காத நிலையில் இனி சிங்கிள் டிஜிட் ஓட்டுக்களை தாண்டாது என்றே கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் நேற்றைய போராட்டத்தில் காவல்துறை அதிகாரிகளையும் போராட்டக்காரகள் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியதாவது: வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்' என்று கூறியுள்ளார். 
 
ரஜினிகாந்த் தனது டுவீட்டில் நாம் தமிழர் கட்சியினர் என்று கூறாவிட்டாலும் அவர்களுக்குத்தான் மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனியின் செல்ல மகளை கொஞ்சி விளையாடிய ஷாருக்கான்