அரசு வேடிக்கை பார்ப்பது புதிராக உள்ளது - ரஜினிகாந்த் அதிரடி

Webdunia
சனி, 31 மார்ச் 2018 (12:20 IST)
ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு வேடிக்கை பார்ப்பது புதிராக உள்ளது என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

 
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையில் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்பட பலவித நோய்கள் ஏற்படுவதாக கூறி அந்த ஆலையை மூடும்படி அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். 
 
அடுத்த ஆண்டுடன் ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்தம் முடிவடையவுள்ள நிலையில் மத்திய அரசு அந்த ஒப்பந்தத்தை நீடித்தது. இதனால் கடும் கொந்தளிப்பில் இருந்த பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆலையை மூட வலியுறுத்தியும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாணவ அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் இன்று 48வது நாளாக தொடருகிறது.
 
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் “ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று  47 நாட்களாக  அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது” என கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் சர்ப்பரைஸ்.. நயினார் நாகேந்திரன் பேட்டி...

ஆம்னி பேருந்தில் 3 மடங்கு கட்டண உயர்வு!.. பொதுமக்கள் அதிர்ச்சி

விஜயின் பிரச்சாரத்திற்கு பிளான் போட்ட ஜான் ஆரோக்கியசாமிக்கு சம்மன்?!.. சிபிஐ அதிரடி...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு!.. இன்று கடைசி நாள்!..

திமுகவுடன் கூட்டணி!. விஜய்க்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்!.. நடந்தது இதுதான்!...

அடுத்த கட்டுரையில்
Show comments